/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேலை உறுதி திட்ட கூலி ரூ.400 அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி
/
வேலை உறுதி திட்ட கூலி ரூ.400 அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி
வேலை உறுதி திட்ட கூலி ரூ.400 அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி
வேலை உறுதி திட்ட கூலி ரூ.400 அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி
ADDED : மார் 27, 2024 06:36 AM
சின்னாளபட்டி : லோக்சபா தேர்தலுக்குப் பின் வேலை உறுதி திட்டக் கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும், என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
தி.மு.க., கூட்டணி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து ஆத்துார் கிழக்கு ஒன்றிய பகுதியில் பிரசாரம் செய்த அவர் பேசியதாவது:
கிராமங்களில் வறுமை , வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்தது வேலை உறுதித் திட்டம். பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இத்திட்டத்தை முற்றிலும் ஒழித்து விடும். அதன் பின் பசியும் பட்டினியும்தான் இருக்கும். கடந்த ஆண்டு கூட்டுறவு துறை அமைச்சராக இருந்தபோது ஆத்துார் தொகுதியில் 110 பேருக்கு ஒரு பைசா செலவில்லாமல் ரேஷன் கடை பணியாளர் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆத்துார், ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களில் கூட்டுறவு அரசு கலைக் கல்லுாரியில் படிக்கும் அனைவருக்கும் கல்வி கட்டணத்துடன் தேர்வு கட்டணமும் வழங்கினேன். தேர்தலுக்குப் பின் வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு ரூ.400 கூலியாக கிடைக்கும் என்றார்.
கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் உலகநாதன் வரவேற்றார். ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முருகேசன், மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி ராஜகணேஷ் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், தண்டபாணி, மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், நிர்வாகி அம்பைரவி பங்கேற்றனர்.

