/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'இந்தியன் 2' ல் இ-சேவை மைய காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு நலச்சங்கத்தினர் எச்சரிக்கை

ADDED : ஜூலை 18, 2024 10:50 PM
திண்டுக்கல்:''இந்தியன் - 2 படத்தில் இ-சேவை மையம் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்ட காட்சிகள் நீக்காவிட்டால் இயக்குனர் சங்கர் , படக்குழுவினர் மீது வழக்கு தொடரப்படும்'' என திண்டுக்கல் இ-சேவை மைய உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் தனராஜ் எச்சரித்துள்ளனர்.
அவர் கூறியதாவது:
சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் மனோ பாலா நடிக்கும் ஒரு சில காட்சிகளில் இ-சேவை மைய ஆப்பரேட்டர்களுக்கு ரூ. 300 கொடுத்தால் தான் ஆதார் தொடர்பான சேவை செய்ய முடியும் என இடம் பெற்றுள்ளது.
இது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இ-சேவை மைய தொழில் , ஆப்பரேட்டர்கள் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது .இதனை நீக்க துறை அமைச்சர், இயக்குனர் சங்கர் , பட குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீக்கப்படவில்லை என்றால் இயக்குனர் ,படக்குழுவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள இ-சேவை மைய உரிமையாளர்களை ஒன்றிணைத்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்றார்.