ADDED : ஏப் 19, 2024 06:07 AM

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தின் முன் பகுதியில் அழகு ஏற்படுத்தும் விதமாக செயற்கை நீருற்று உள்ளது. இது குடியரசு தினம்,சுதந்திர தினம் போன்ற விழாக்காலங்களில் மட்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. மற்ற நேரங்களில் பயன்பாடற்று கிடக்கிறது. இதை பார்க்கும் மக்கள் எல்லா நேரங்களிலும் செயற்கை நீருற்று பயன்பாட்டில் இருக்கலாமே என கூறியபடி கடந்து செல்கின்றனர். தற்போது கோடையாக இருப்பதால் வெயிலில் சுற்றித்திரியும் பறவைகள் செயற்கை நீருற்றில் தண்ணீர் வந்தால் இளைப்பாறி உற்சாகமாக குளியல் போடும் இடமாக மாறும். மாநகராட்சி நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கலாமே .
........
நடவடிக்கை எடுக்கப்படும்
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன் பகுதியில் உள்ள செயற்கை நீருற்றை தினமும் பயன்பாட்டில் இருப்பது போன்று நடவடிக்கை எடுக்கப்படும்.
-ரவிச்சந்திரன்,மாநகராட்சி கமிஷனர்,திண்டுக்கல்.

