/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் மதநல்லிணக்க இப்தார் விருந்து
/
திண்டுக்கல்லில் மதநல்லிணக்க இப்தார் விருந்து
ADDED : ஏப் 09, 2024 12:32 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட இளைஞர் ஜமாத் பேரவை சார்பில் நடந்த சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்ட இளைஞர் ஜமாத் பேரவை சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு மலையடிவாரம் ரோட்டில் உள்ள ஈத்கா மஹாலில் ஒருங்கிணைப்பாளர் கணவா உசேன் தலைமையில் நடந்தது.
முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் முன்னிலை வகித்தனர்.
நாகல்நகர் ஜிம்ஆ பள்ளிவாசல் தலைவர் அப்துல் புகாரி, செயாளர் அலாவுதீன், பேகம்பூர் மாஸ் தர்கா செயலாளர் அப்துல் கபூர், துணை ச்செயலாளர் சுலைமான் ஆரீப், பொருளாளர் இமாம் அஹமது உசேன் பங்கேற்றனர்.
முன்னாள் மேயர் மருதராஜ், எஸ்.டி.பி.ஐ., மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், அம்மா பேரவை இணை செயலாளர் கண்ணன், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன், சமூக ஆர்வலர் காஜாமைதீன், அம்மா பேரவை செயலாளர் பாரதிமுருகன் பங்கேற்றனர்.

