/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திறந்தவெளியில் பழங்கள் விற்பனை: ஆய்வு அவசியம்
/
திறந்தவெளியில் பழங்கள் விற்பனை: ஆய்வு அவசியம்
ADDED : ஏப் 10, 2024 05:26 AM
திண்டுக்கல் : கோடை காலத்தை முன்னிட்டு திண்டுக்கல் நகர் ரோட்டோரங்களில் புதிதாக அமைக்கப்பட்ட தற்காலிக பழக்கடைகளில் பொருட்கள் சுகாதாரமாக உள்ளதா என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவ்வபோது ஆய்வு செய்ய வேண்டும்.
கோடை காலங்களில் மக்கள் அதிகளவில் தர்பூசணி, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை, மாம்பழங்கள் போன்ற பழங்கள்,ஜூஸ்களை விரும்பி சாப்பிடுகின்றனர்.
ரோட்டோர கடைகளில் விற்கப்படும் பொருட்கள் சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வது அவசியமாகிறது.
இதன்மீது மாவட்ட நிர்வாகம் முழு கவனம் செலுத்த வேண்டும்.
செல்வம்,உணவு பாதுகாப்பு அலுவலர்,திண்டுக்கல்: மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் ரோட்டோரங்களில் செயல்படும் பழக்கடைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

