/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
10 ஆண்டு ஆட்சிப் பொறுப்பிலிருந்த பா.ஜ., கச்சத்தீவுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன் மா.கம்யூ., முன்னாள் எம்.பி., ரங்கராஜன் கேள்வி

ADDED : ஏப் 04, 2024 03:53 AM
திண்டுக்கல்: ''10 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பிலிருந்த பா.ஜ.,தற்போது கச்சத்தீவு விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் ''என மா.கம்யூ., முன்னாள் எம்.பி., ரங்கராஜன் பேசினார்.
திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் மா.கம்யூ.,வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து அவர் பேசியதாவது: தற்போது உலகம் முழுவதுமுள்ள 55 நாடுகளில் தேர்தல் நடக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை ஜனநாயகத்தை பாதுக்காக்க வேண்டிய அவசியத்தோடு இந்த தேர்தலை எதிர் கொண்டிருக்கிறோம். பா.ஜ., என்பது ஒரு அரசியல் கட்சி அல்ல. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அரசியல் திரிபு தான் பா.ஜ.,
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையோ, மாநில உரிமைகளையோ ஆர்.எஸ்.எஸ்., ஏற்று கொள்வதில்லை.
மனு தர்மத்தின் படி ஆட்சிபுரிய வேண்டும் என்ற கோட்பாடுகளை கொண்ட இயக்கம் பா.ஜ., புதிய அரசியல் சட்டம் அமலுக்கு வந்துவிட்டதை போன்று மாநில அரசின் அதிகாரங்களில் கவர்னர்கள் தலையீடு செய்கின்றனர்.
10 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பிலிருந்த பா.ஜ.,தற்போது கச்சத்தீவு விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பொய் கூறுவதை ஏற்க முடியாது, என்றார்