/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடிநீர் துண்டித்த சில மணி நேரத்தில் இணைப்பு
/
குடிநீர் துண்டித்த சில மணி நேரத்தில் இணைப்பு
ADDED : மார் 28, 2024 06:54 AM
கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி நிலுவையை செலுத்தாத தனியார் விடுதி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மீண்டும் இணைப்பு வழங்கப்பட்டது.
செவன் ரோட்டில் பிரபல தனியார் விடுதி செயல்படுகிறது.
நீண்ட காலமாக இவ்விடுதியின் சொத்துவரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளது.
விடுதி நிர்வாகமோ சொத்து வரி உயர்வு சம்மந்தமாக நீதிமன்றத்தை நாடி தடுப்பாணை பெற்றுள்ளது.
இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் விடுதிக்கு நோட்டீஸ் வழங்கி விடுதியின் குடிநீர் இணைப்பை துண்டித்தது.
விடுதி நிர்வாகமோ நீதிமன்ற தடுப்பாணை உத்தரவை நகராட்சியில் வழங்கிய சில மணி நேரத்தில் மீண்டும் விடுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
சத்தியநாதன், கமிஷனர், கொடைக்கானல்: சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகம் சொத்து வரி செலுத்தாதது தொடர்பாக நினைவூட்டல் செய்த போதும் இதுவரை செலுத்தவில்லை.
இதை தொடர்ந்து குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் பெற்ற தடுப்பாணையை சுட்டி காட்ட, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் தீர்ப்பு வரும் வரை தற்காலிகமாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கையை தவிர்த்துள்ளது என்றார்.

