/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பூப்பந்தாட்டத்தில் வென்ற வீரர்களுக்கு வாழ்த்து
/
பூப்பந்தாட்டத்தில் வென்ற வீரர்களுக்கு வாழ்த்து
ADDED : மார் 27, 2024 06:50 AM

-திண்டுக்கல் : அண்ணா பல்கலை விளையாட்டு வாரியம், சென்னை அண்ணா பல்கலை, பி.எஸ்.என்.ஏ., பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரி, தமிழ்நாடு, இந்திய பல்கலை சார்பில் இந்திய பல்கலைகளுக்கு இடையேயான பெண்கள் பூப்பந்தாட்டப் போட்டி திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் நடந்தது.
இந்த போட்டியில் முதல் இடத்தை தமிழ்நாடு அண்ணா பல்கலை, 2ம் இடம் தமிழ்நாடு யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ், 3ம் இடம் தமிழ்நாடு மதுரை காமராஜ் பல்கலை, 4ம் இடம் கேரளா கோட்டையம் மகாத்மா காந்தி பல்கலை வென்றது.
வெற்றி பெற்ற அணி வீரர்களை ஏ.யு.எஸ்.பி., செயலாளர் பாலகுமாரன், மாவட்ட வாலிபால் சங்க செயலாளர் சுப்பையா, பி.எஸ்.என்.ஏ., பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரி சேர்மன் ரகுராம், ஏ.யூ.எஸ்.பி. சேர்மன் செந்தில்குமார், அன்னை பல்கலை அணி பயிற்சியாளர்கள் மாறன், விஜய் வாழ்த்தினர்.

