/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முன்விரோத தாக்குதல் 9 பேர் மீது வழக்கு
/
முன்விரோத தாக்குதல் 9 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 22, 2024 05:50 AM
தாடிக்கொம்பு, : தாடிக்கொம்பு பழைய காப்பிளியபட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சூர்யா 27.
இவரது ஊரில் 10 நாட்களுக்கு முன் நடந்த காளியம்மன் கோயில் திருவிழாவில் மைக் செட் போடுபவரை பாட்டு போட சொல்லியதில் தகராறு ஏற்பட்டு, அன்று நடக்க இருந்த நாடகம் நடக்கவில்லை. ஏப். 19ல்,சூர்யா, அவரது சித்தப்பா செல்வம்,மகன் சரவணகுமார் ஆகியோர் கோயில் அருகே நின்றனர். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த கஜேந்திரன், மணிவேல், மதன், சுரேஷ், போஸ், அனீஸ், நாகப்பன், முத்து, சண்முகசுந்தரி ஆகிய 9 பேரும் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். இதில் செல்வம்,சரவணக்குமார்,சூர்யா காயமானர். தாடிக்கொம்பு எஸ்.எஸ்.ஐ.,பெருமாள் சாமி தாக்குதலில் ஈடுபட்ட கஜேந்திரன், மணிவேல், மதன், சுரேஷ், போஸ், அனீஸ், நாகப்பன், முத்து, சண்முகசுந்தரி ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

