/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓட்டு எண்ணிக்கை மைய பணிகளை முடிக்க கெடு
/
ஓட்டு எண்ணிக்கை மைய பணிகளை முடிக்க கெடு
ADDED : ஏப் 14, 2024 06:36 AM
திண்டுக்கல்: ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்படும் அறைகள் ஏற்பாடு, கண்காணிப்பு கோபுரம் உள்பட அனைத்து பணிகளையும் நாளைக்குள் (ஏப். 15) -முடித்திட கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தி உள்ளார்.
திண்டுக்கல் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையம் முத்தனம்பட்டி அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டு வருகிறது.
ஓட்டுப்பதிவு முடிந்த பின் இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான அறை ,எண்ணிக்கை நடைபெற உள்ள அறைகள் சட்டசபை தொகுதி வாரியாக தனித்தனியாக அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி தரைத்தளத்தில் திண்டுக்கல், பழநி, முதல் தளத்தில் நத்தம், ஆத்துார், 2ம் தளத்தில் ஒட்டன்சத்திரம்,
நிலக்கோட்டை தொகுதிகளுக்கு தனித்தனியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை ஓட்டு எண்ணிக்கை அறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் அறைகள், கட்டுப்பாட்டு அறைகள், செய்தியாளர் அறைகள், பார்வையாளர்கள் அறைகள் என பல்வேறு அறைகள் தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, வெளிப்பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படுகிறது.
இதை நேற்று கலெக்டர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார்.
இங்கு மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளையும் நாளைக்குள் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உதவித் திட்ட அலுவலர் சதீஸ்பாபு, தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.

