/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தினமும் கையெழுத்திடும் உத்தரவை ரத்து செய்யகோரி அங்கித்திவாரி மனு
/
தினமும் கையெழுத்திடும் உத்தரவை ரத்து செய்யகோரி அங்கித்திவாரி மனு
தினமும் கையெழுத்திடும் உத்தரவை ரத்து செய்யகோரி அங்கித்திவாரி மனு
தினமும் கையெழுத்திடும் உத்தரவை ரத்து செய்யகோரி அங்கித்திவாரி மனு
ADDED : ஏப் 09, 2024 05:25 AM

திண்டுக்கல் : லஞ்ச வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திடும் உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவை சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி 2023 டிச.1ல் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் கோரி அங்கித்திவாரி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமின் பெற்றார்.
தினமும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா மார்ச் 22ல் உத்தரவிட்டார். மார்ச் 23 முதல் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று அங்கித்திவாரி தரப்பு வழக்கறிஞர் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், அங்கித் திவாரி தினமும் அதிக துாரத்திலிருந்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் கையெழுத்திட வருவதற்கு சிரமமாக உள்ளதால் நேரில் ஆஜராகி கையெழுத்திடும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இம்மனு ஏப்.12ல் விசாரணைக்கு வருகிறது.

