/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குதிரை, காளை பூட்டிய ரேக்ளா வண்டியில் வந்து நேர்த்திக்கடன் ஒட்டன்சத்திரம் அருகே வினோதம்

ADDED : ஏப் 25, 2024 04:35 AM

ஒட்டன்சத்திரம் : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அமர பூண்டி வத்தகவுண்டன்வலசை சேர்ந்த விவசாயிகள் சின்னச்சாமி, சிவராஜ், காமராஜ் ஆகியோர் ரேக்ளா வண்டியின் ஒருபுறம் குதிரையும் இன்னொரு புறம் காளையையும் பூட்டி வல்லக்குண்டாபுரம் சுயம்பு முத்து மாரியம்மன் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
மாறுபட்ட ஜோடி ரேக்ளா வண்டியை இழுத்துச் சென்றதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதுபோல் மற்ற கிராமங்களில் இருந்தும் காளைகள் பூட்டிய வண்டிகளில் வந்து தரிசனம் செய்தனர்.
விவசாயி சின்னச்சாமி கூறியதாவது: நான்கு வயதான காளையையும் நான்கு வயதான குதிரையையும் ஒரே ரேக்ளா வண்டியில் பூட்டி பழக்கப்படுத்தி ஓட்டி வருகிறேன். நுாற்றில் ஒரு மாடு தான் குதிரையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து வண்டியை இழுத்து வேகமாக செல்லும் என்றார்.