/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தெளிவான முடிவு அவசியம் ஏ.எஸ்.பி., சிபின் பேச்சு
/
தெளிவான முடிவு அவசியம் ஏ.எஸ்.பி., சிபின் பேச்சு
ADDED : ஏப் 25, 2024 04:25 AM

திண்டுக்கல், : ''மாணவர்கள் தெளிவான முடிவெடுத்து வாழ்வில்முன்னேற வேண்டும்'' என ஏ.எஸ்.பி., சிபின் பேசினார்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு கிரியம்பட்டி ஸ்ரீ.வி.கல்லுாரியில் நடந்த ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது: வாழ்வின் முக்கிய முடிவெடுக்க மாணவர்கள் குழப்பமின்றி செயல்படும் தருணம் இதுவாகும். பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து நல்ல முடிவை மேற்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். இணையத்தை நல்வழியில் பயன்படுத்தினால் அது உங்கள் வாழ்விற்கு உதவும் என்றார். கல்லுாரி செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் அசோகராஜன் வரவேற்றார். கல்லுாரி டீன் மகேந்திரன், தலைவர் சுதந்திரம் பேசினர். ஏ.எஸ்.பி., சிபின், இன்ஸ்பெக்டர் பாலகுரு, இயக்குனர்கள் சாந்தி, பிரியா, அருண் குத்துவிளக்கேற்றினர். பேராசிரியர் சொரூபராணி ஆண்டறிக்கை வாசித்தார். பேராசிரியர்கள் ரம்யா, வாசுகி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். நேரு யுவகேந்திரா மாவட்ட நியமன பொறுப்பாளர் முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். மதுரை காமராஜ் பல்கலை தேர்வில் அதிக மதிப்பெண் , விளையாட்டில் சாதனை, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் துரைப்பாண்டி,சத்யா, வெர்ஜின், உடற்கல்வி இயக்குனர் சுரேஷ், அட்மின் மேனேஜர் மணிகண்டபாபு, ஜிம் மாஸ்டர் அஜீஸ்குமார் செய்தனர். துணை இயக்குனர் வில்சன், பேராசிரியை பிரியா நன்றி கூறினர்.

