ADDED : ஏப் 06, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : மதுரையிலிருந்து மதுரை சேலம் சென்ற அரசு பஸ்சை மதுரை மதியழகன் 47, ஓட்டி சென்றார். பஸ்சில் 26 பயணிகள் இருந்தனர். இந்த பஸ், வேடசந்துார் லட்சுமணன்பட்டி நால்ரோடு வந்தபோது முன்னால் சென்ற பழனி ஆயக்குடியை சேர்ந்த ராஜசேகர் 42, ஓட்டிச் சென்ற டிப்பர் லாரி பிரேக் போட்ட நிலையில், லாரியின் பின்புறத்தில் அரசு பஸ் மோதியது.
பஸ்சின் முன்புறம் சேதமடைந்தது. பஸ்சில் பயணம் செய்த 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.

