/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் பெண் ஆசை காட்டி விவசாயியிடம் பணம் பறிப்பு இரு பெண்களுடன் 5 பேர் கைது

ADDED : மே 14, 2024 12:42 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பெண் ஆசை காட்டி விவசாயியை மிரட்டி பணம் பறித்த இரு பெண்கள் உட்பட ஐந்து பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்த 45 வயது விவசாயிடம் அலைபேசியில் பேசிய சின்னாளபட்டியைச் சேர்ந்த பவித்ரா 24, ஆசை வார்த்தைகளை கூறி உள்ளார்.
இதை தொடர்ந்து விவசாயியை பழநியில் உள்ள விடுதிக்கு அழைத்து வந்தார். அங்கு இருவரும் அறையில் தங்கி இருந்தபோது அங்கு வந்து கும்பல் விவசாயிடம் இருந்த அலைபேசி, ரூ.பத்தாயிரத்தை மிரட்டி பறித்துச் சென்றனர். இதன்பின் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுவதாக விவசாயி பழநி டவுன் போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி போலீசார் பழநி சண்முக நதி பாலம் அருகே சென்ற காரை சோதனை செய்தனர். அதில் இருந்த திண்டுக்கல் பாலகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த குணசேகரன் 40, நந்தவனப் பட்டியைச் சேர்ந்த லோகநாதன் 28, சீலப்பாடியை சேர்ந்த காமாட்சி 22, நத்தம் அண்ணா நகரை சேர்ந்த பாலமுருகன் 37, சின்னாளபட்டியைச் சேர்ந்த பவித்ரா 24, ஆகியோரிடம் விசாரித்தபோது இவர்கள் தான் விவசாயியை மிரட்டிய கும்பல் என்பது தெரிந்தது.
இவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த கத்தி, இரண்டு சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.