/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'489 மனுக்களில் 302 க்கு தீர்வு'
/
'489 மனுக்களில் 302 க்கு தீர்வு'
ADDED : பிப் 27, 2025 01:44 AM
திண்டுக்கல்:''மாநில சிறுபான்மையினர் ஆணையம் இதுவரை மேற்கொண்ட ஆய்வில் 489 மனுக்களில் 302 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது'' என அதன் தலைவர் ஜோஅருண் கூறினார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் நடந்த திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் தலைமை வகித்து அவர் பேசியதாவது :
சிறுபான்மையின மக்கள் பாதுகாப்புடன், மத நல்லிணக்கத்துடன் வசிக்கின்றனரா என்பது குறித்து 38 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 11 மாவட்டங்களில் ஆய்வு முடிந்தது. சிறுபான்மையின மதத்தை சேர்ந்தவர்களின் பிரச்னைகள், நெருக்கடிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆணையம் இதுவரை மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு விவகாரம் தொடர்பாக 489 மனுக்களில் 302 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.
கலெக்டர் சரவணன், எஸ்.பி., பிரதீப் முன்னிலை வகித்தனர். சச்சிதானந்தம் எம்.பி., கலந்து கொண்டார். சர்சகளில் பணிபுரியும் உபதேசிகர்கள், பணியாளர்களுக்கு நல வாரிய அட்டைகளை வழங்கினார்.

