/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காதலர்களை கட்டிப்போட்டு கத்திமுனையில் 2 சகோதரிகள் பலாத்காரம்: 3 பேர் கைது
/
காதலர்களை கட்டிப்போட்டு கத்திமுனையில் 2 சகோதரிகள் பலாத்காரம்: 3 பேர் கைது
காதலர்களை கட்டிப்போட்டு கத்திமுனையில் 2 சகோதரிகள் பலாத்காரம்: 3 பேர் கைது
காதலர்களை கட்டிப்போட்டு கத்திமுனையில் 2 சகோதரிகள் பலாத்காரம்: 3 பேர் கைது
ADDED : ஏப் 06, 2024 01:07 AM
சாணார்பட்டி:திண்டுக்கல் அருகே காதலர்களை கட்டிப்போட்டு 19, 17 வயது அக்கா, தங்கையை கத்தியால் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தப்பிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 19, 17, 13 வயதில் 3 மகள்கள் உள்ளனர். 19 வயது பெண்ணுக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பெற்றோருடன் வசித்து வருகிறார். 19, 17 வயது சகோதரிகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
சகோதரிகள் இருவரும் காதலர்களுடன் மார்ச் 30ல் இடையகோட்டையில் நடந்த ஒரு கோயில் திருவிழாவிற்கு சென்றனர். வீடு திரும்பும் வழியில் தாடிக்கொம்பு அருகே ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சாலையோரம் அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது டூவீலர்களில் சென்ற மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரண்குமார் 21, முத்தழகுபட்டியைச் சேர்ந்த வினோத்குமார் 26, முருகபவனத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் 22, ஆகியோர் கத்தியை காட்டி அவர்களை மிரட்டினர்.
பின் காதலர்கள் இருவரை ஒரு பைக்கிலும், சகோதரிகள் இருவரை மற்றொரு பைக்கிலும் ஏற்றிக் கொண்டு தாமரைக்குளம் பகுதிக்கு சென்றனர். அங்கு காதலர்களை கயிற்றால் கட்டினர்.
அங்கு வந்த பிரசன்ன குமாருடன் 25, இணைந்து சகோதரிகளை இரவு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பினர்.
மூவரையும் போலீசார் கைது செய்தனர். தப்பிய பிரசன்னகுமாரை தேடி வருகின்றனர். இதில் பிரசன்னகுமார், சரண்குமார் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
பின் மூவரும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

