/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் ரூ.1400 கோடியில் பணிகள் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தகவல்
/
பழநியில் ரூ.1400 கோடியில் பணிகள் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தகவல்
பழநியில் ரூ.1400 கோடியில் பணிகள் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தகவல்
பழநியில் ரூ.1400 கோடியில் பணிகள் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தகவல்
ADDED : செப் 07, 2024 07:21 AM

பழநி: 'பழநி தொகுதியில் ரூ.1400 கோடியில் வளர்ச்சி பணிகள் நடத்துள்ளதாக,'' தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.,யுமான செந்தில்குமார் பேசினார்.
பழநியில் தி.மு.க., சார்பில் நடந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: அரசின் சாதனைகளை சாமான்ய மக்களிடம் தி.மு.க.,வினர் எடுத்துரைக்க வேண்டும். 3 ஆண்டுகளில் பழநி தொகுதியில் ரூ.1400 கோடியில் திட்டப்பணிகள் நடந்துள்ளன. பழநி அடிவார சாலையோர வியாபாரிகளுக்கு பெருந்திட்ட வரைவு திட்டத்தின்கீழ் நிரந்தர கடைகள் அமைத்துத் தரப்படும். கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் பயன்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். 2026க்கு பிறகும் தி.மு.க., ஆட்சிதான் என்றார்.மாவட்ட அவைத்தலைவர் காமாட்சிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன், நகராட்சித்தலைவர் உமாமகேஸ்வரி, தி.மு.க., நகர செயலாளர் வேலுமணி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் லோகநாதன் கலந்து கொண்டனர்.