/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பயிற்சி வகுப்பில் பங்கேற்காத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
/
பயிற்சி வகுப்பில் பங்கேற்காத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
பயிற்சி வகுப்பில் பங்கேற்காத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
பயிற்சி வகுப்பில் பங்கேற்காத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
ADDED : மார் 30, 2024 04:56 AM
திண்டுக்கல், : தேர்தல் பணி தொடர்பான பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 300க்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் வேடசந்தூர் தொகுதி கரூர் லோக் தொகுதியில் உள்ளது. 7 தொகுதிகளைச் சேர்ந்த 18.66 லட்சம் வாக்காளர்கள் 2121 ஓட்டுச் சாவடிகள் மூலம் ஓட்டளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதற்கான தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 20ஆயிரம் பேருக்கு முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு 24 ம் தேதி நடந்தது.
இதில் பங்கேற்காத 300க்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான பூங்கொடி விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
இந்த ஊழியர்கள் ,மார்ச் 30 ல் நடக்கும் பயிற்சி வகுப்பில் பங்கேற்று விளக்கம் அளிக்க வேண்டும் .தவறும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

