ADDED : ஏப் 01, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : வேடசந்துார் தலைமை காவலர் அருளப்பன், முதுநிலை காவலர் ஜோஸ்பின் அமலா ராணி ஸ்ரீ ராமபுரத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள நாடக மேடை அருகே முறையான அனுமதி இன்றி, தேர்தல் விதிகளை மீறி அ.தி.மு.க., கட்சி கொடி கட்டப்பட்டிருந்ததை கண்டனர்.
எனவே கொடிகளைக் கட்டிய அ.தி.மு.க., அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளரான வெள்ளனம்பட்டியை சேர்ந்த கணேசன் மீது எஸ்.ஐ., யோகராணி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

