ADDED : ஏப் 13, 2024 02:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி : கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை யொட்டி பாலாலய பூஜைகள் நடந்தது.
இதன் விழாவையொட்டி மூலவர் , வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து புனித நீர் நிறைந்த கலசங்களை வைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், மஹாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை உள்ளிட்ட திருவேள்வி ஹோம பூஜைகள் நடந்தது. கிராம கோயில் கரைகாரர்கள், பூசாரிகள் ,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

