/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடுகள் ஜரூர்
/
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடுகள் ஜரூர்
ADDED : ஏப் 19, 2024 06:05 AM
ரெட்டியார்சத்திரம்: திண்டுக்கல் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை ரெட்டியார்சத்திரம் சில்வார்பட்டி அண்ணா பல்கலையில் நடக்கும் நிலையில் ,ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு, எண்ணிக்கை மைய ஆயத்த ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது.
திண்டுக்கல் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை ரெட்டியார்சத்திரம் சில்வார்பட்டி அண்ணா பல்கலையில் நடக்கிறது. ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்துார், நிலக்கோட்டை, நத்தம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பூத்களில் இருந்து கொண்டு வரப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இங்கு வைக்கப்படுகிறது.
ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ல் நடப்பதால் அதுவரை இங்குள்ள பிரத்யேக அறைகளில் பாதுகாக்கப்பட உள்ளன.
இதையடுத்து குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட ஆயத்த பணிகள் மும்முரமாக நடக்கிறது.
கலெக்டர், ஊரக வளர்ச்சி முகமை, போலீஸ் துறை உயர் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு வருகின்றனர்.
150க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வளாகம் முழுவதும் துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தலா ஆயிரம் லிட்டர் கொண்ட தண்ணீர் தொட்டிகள் 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் கிருமிநாசினி தெளிப்பு பணியும் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை நாளில் பாதுகாப்புடன் கூடிய கூடுதல் சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

