/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் 2 சுயேட்சைகள் வேட்புமனு
/
திண்டுக்கல்லில் 2 சுயேட்சைகள் வேட்புமனு
ADDED : மார் 23, 2024 06:21 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் போட்டியிட சுயேட்சையாக இருவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20 ல் தொடங்கியது. முதல் 2 நாட்களில் யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. நேற்று சுயேட்சை வேட்பாளர்களாக திண்டுக்கல் ஏ.வெள்ளோடு நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.தினேஷ் குமார் 28 , திண்டுக்கல் நாகல்நகர் பகுதியை சேர்ந்த ரா.ஆறுமுகம் 49 ,ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.
அகில இந்திய இளைஞர்கள் முன்னேற்ற கட்சியைச் சேர்ந்த தினேஷ்குமார் விற்பனை பிரதிநிதியாகவும், 18 சித்தர் கட்சியைச் சேர்ந்த ஆறுமுகம் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

