/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் வி.சி.க., கண்டன ஆர்ப்பாட்டம்
/
தர்மபுரியில் வி.சி.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 16, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி:தர்மபுரியில்
வி.சி.க., சார்பில், மத்திய அரசை கண்டித்து, மாவட்ட செயலாளர்
பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தர்மபுரி டவுன்
பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மண்டல
செயலாளர் தமிழ்அன்வர் முன்னிலை வகித்தார். இதில், குடியுரிமை திருத்த
சட்டம் மூலம் மதசார்பின்மையை சிதைக்கும், இஸ்ஸாமியர்களுக்கு
எதிரான சி.எ.எ., சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில்
பெட்ரோல், டீசல் மீதான வரியை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நிர்வாகிகள்
கருப்பண்ணன், சாக்கன்சர்மா உள்பட பலர் பங்கேற்றனர்.

