/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரயில் பயணி தவறவிட்ட மொபைல் ஒப்படைப்பு
/
ரயில் பயணி தவறவிட்ட மொபைல் ஒப்படைப்பு
ADDED : டிச 16, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, சவுளுபட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வி, 62, இவர் நேற்று முன்தினம் துாத்துக்குடி -மைசூர் எக்ஸ்பிரசில் திண்டுக்கலில் இருந்து தர்மபுரிக்கு வந்தார். தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனில் ரயிலை விட்டு இறங்கும் போது, அவருடை மொபைல்போனை மறந்து வைத்துவிட்டு இறங்கி விட்டார்.
இது குறித்து, தர்மபுரி ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., தங்கராசுவிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ரயிலில் இருந்த ரோந்து பெண் போலீஸ் தேன்மொழிக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, அவர் மொபைலை கண்டுபிடித்து, நேற்று காலை தமிழ்செல்வியிடம் ஒப்படைத்தார்.

