ADDED : ஜூன் 22, 2026 04:57 AM
அ நிறம் | அளவு
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ளது லிங்கா-புரம் ஏரி. மழைக்காலங்களில் வாணியாற்றில் வரும் வெள்ள நீர் மற்றும் வாணியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் ஏரி நிரம்பும். இந்த ஏரி நிரம்பியவுடன் அதிலிருந்து, வெளியேறும் உபரிநீர் ஒரு கி.மீ., துாரத்தில் உள்ள நர்சனேரிக்கு செல்லும். இந்நி-லையில் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாய் சில இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்-பட்டுள்ளது.
இதனால், லிங்காபுரம் ஏரி நிரம்பிய போதிலும், கடந்த, 4 ஆண்டுகளாக நர்சனேரிக்கு உபரி நீர் செல்லவில்லை.
எனவே, நர்சனேரிக்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
