/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாசஞ்சர் ரயிலை சேலம் வரை நீடிக்க தி.மு.க., - எம்.பி.,யிடம் கோரிக்கை
/
பாசஞ்சர் ரயிலை சேலம் வரை நீடிக்க தி.மு.க., - எம்.பி.,யிடம் கோரிக்கை
பாசஞ்சர் ரயிலை சேலம் வரை நீடிக்க தி.மு.க., - எம்.பி.,யிடம் கோரிக்கை
பாசஞ்சர் ரயிலை சேலம் வரை நீடிக்க தி.மு.க., - எம்.பி.,யிடம் கோரிக்கை
ADDED : நவ 17, 2024 01:47 AM
பாசஞ்சர் ரயிலை சேலம் வரை நீடிக்க
தி.மு.க., - எம்.பி.,யிடம் கோரிக்கை
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 17---
பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில், 15 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதில் நடைமேடைகள், நிழற்குடைகள், மகளிர் மற்றும் பொது பயணிகள் காத்திருப்பு கூடம், சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை வசதிகள், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், லிப்ட் வசதிகள், தங்கும் விடுதி, உணவு விடுதிகள் உள்ளிட்ட பணிகள் நடந்து
வருகிறது. இதை நேற்று தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி ஆய்வு செய்து, பணிகள் குறித்து நிலைய அதிகாரியிடம் கேட்டறிந்தார். அப்போது பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில் கோவை, மைசூர், நாகர்கோவில், உதய், டி.வி.சி., எக்ஸ்பிரஸ்கள் நின்று செல்லவும், அரக்கோணம் முதல் ஜோலார்பேட்டை வரை செல்லும் பாசஞ்சர் ரயிலை, சேலம் வரை நீடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். பொம்மிடி முதல் கொண்டகரஹள்ளி ஊராட்சி காளிகரம்பு- - -மிட்டாரெட்டிஹள்ளி வழியாக, தர்மபுரி செல்ல தார்ச்சாலை அமைக்க தேவைப்படும் இடத்தை, காளிக்கரம்பு வனப்பகுதியில், எம்.பி., மணி பார்வையிட்டார். அப்போது, மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பழனியப்பன், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் சத்யமூர்த்தி, ஒன்றிய செயலாளர் சரவணன், நகர செயலாளர் கவுதமன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

