/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடத்தூர் பி.டி.ஓ., அலுவலகம் முன் பஸ்கள் நின்று செல்ல வேண்டுகோள்
/
கடத்தூர் பி.டி.ஓ., அலுவலகம் முன் பஸ்கள் நின்று செல்ல வேண்டுகோள்
கடத்தூர் பி.டி.ஓ., அலுவலகம் முன் பஸ்கள் நின்று செல்ல வேண்டுகோள்
கடத்தூர் பி.டி.ஓ., அலுவலகம் முன் பஸ்கள் நின்று செல்ல வேண்டுகோள்
ADDED : பிப் 26, 2024 07:13 AM
கடத்துார் : கடத்துார் - --தர்மபுரி செல்லும் சாலையில், கடத்துார் பி.டி.ஓ., அலுவலகம், பாலிடெக்னிக் கல்லுாரி, தானியக்கிடங்கு மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. ஒன்றிய அலுவலகத்திற்கு தென்கரைக்கோட்டை, சந்தப்பட்டி, சிந்தல்பாடி, ரேகடஹள்ளி உள்ளிட்ட, 25 ஊராட்சிகளில் இருந்து தினமும், நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அதேபோல
தர்மபுரி, ஒடசல்பட்டி பகுதியில் இருந்தும் அப்பகுதிக்கு பலர் வருகின்றனர்.
அவ்வாறு வருபவர்கள் இந்த பி.டி.ஓ., அலுவலக பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்தப்படாததால், இறங்க முடிவதில்லை. அதற்கு பதிலாக, ஒரு கி.மீ., தொலைவிலுள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு, பஸ்கள் நிறுத்தப்பட்டு இறக்கி விடப்படுகின்றனர். சில நேரங்களில், பஸ் ஸ்டாண்டில் இருந்து, 3 கி.மீ., நடந்து வர வேண்டும். இதனால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். பி.டி.ஓ., அலுவலகம் முன்பு, தர்மபுரி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 7 லட்ச ரூபாய் மதிப்பில் நிழற்கூடம் அமைக்கப்பட்டும், அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்படாததால் அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே, இந்த அலுவலக பஸ் நிறுத்தத்தில், அனைத்து பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.

