/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊர்க்காவல் படைக்கு ஆட்சேர்ப்பு: எஸ்.பி.,
/
ஊர்க்காவல் படைக்கு ஆட்சேர்ப்பு: எஸ்.பி.,
ADDED : டிச 21, 2025 06:47 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில், 32 காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடப்பது குறித்து, மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் வெளியிட்டுள்ள
அறிக்கை:
தர்மபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலி-யாக உள்ள, 31 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்-பட, 32 காலி பணியிடங்களுக்கு புதிய ஆட்களை கொண்டு தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. எனவே, தர்மபுரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டு, நிரந்தரமாக வசிக்கும் நபர்கள் தர்மபுரி டவுன், அதியமான்கோட்டை, தொப்பூர், மதி-கோன்பாளையம், கிருஷ்ணாபுரம், ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களை உள்ளடக்கிய, தர்மபுரி உட்கோட்டத்தில் விருப்பமுள்ள, 10ம் வகுப்பு தேர்ச்சி
பெறாத மற்றும் தேர்ச்சி பெற்ற ஆண்கள் மற்றும் மட்டும் டிச., 31க்குள் தர்மபுரி ஊர்க்காவல் படை அலுவலகம், சாலை விநாயகர் கோவில் தெரு, தாசில்தார் அலுவலகம் எதிரில், தர்மபுரி, என்ற முகவரிக்கு, ஒரிஜினல் ஆவணங்களுடன் நேரில் வந்து விண்ணப்பத்தை பெற்று கொள்-ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

