/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலையில் கவிழ்ந்த லாரி போக்குவரத்து பாதிப்பு
/
சாலையில் கவிழ்ந்த லாரி போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 15, 2025 03:10 AM
ஓசூர், ஒசூர் அடுத்த கோபச்சந்திரம் அருகே சென்னை- -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஓராண்டிற்கு மேலாக நடந்து வரும் நிலையில், மேம்பாலத்தின் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று மாலை, ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி, வெங்காய லோடு லாரி சென்றது.
அந்தியூரை சேர்ந்த விவேகானந்தன், 31 என்பவர் லாரியை ஓட்டினார். கோபச்சந்திரம் அருகே சர்வீஸ் சாலையில் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாய்ந்தது. அப்போது பக்கவாட்டில் வந்த, 2 கார்கள் லாரியின் அடியில் சிக்கின. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பொக்லைன் மூலம் லாரியும், கார்களும் மீட்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில், 5 கி.மீ., அளவிற்கு நெரிசலுடன், ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்

