/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை சார்பில் அக்., 6ல் தர்மபுரியில் வலிப்பு நோய் மருத்துவ முகாம் தர்மபுரி, அக். 4-

ADDED : அக் 04, 2024 01:13 AM
கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை சார்பில்
அக்., 6ல் தர்மபுரியில் வலிப்பு நோய் மருத்துவ முகாம்
தர்மபுரி, அக். 4-
கோவையில், 25 ஏக்கரில், 2,250 படுக்கை வசதியுடன் அமைந்திருக்கும் கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிடல் குழுமம் கடந்த, 33 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத்தரமான மருத்துவ சேவைகளை மக்களுக்கு அளித்து வருகிறது.
வலிப்பு நோய் அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய மூளையில் ஏற்படும் ஒரு நரம்பியல் நோய். இதை ஆரம்ப நாட்களிலேயே கண்டறிந்தால், 70 சதவீத வலிப்பு நோயை மருந்துகளினால் குணப்படுத்தி விட முடியும். சில வகை வலிப்பு நோய்களுக்கு அறுவை சிகிச்சை, உணவு பழக்க மாறுதல் முதலான மாற்று சிகிச்சை முறைகள் தேவைப்படும். கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதியை தவிர, கட்டுப்படுத்த இயலாத வலிப்பு நோயாளிகளுக்காக வீடியோ, ஈசிஜி கருவி வசதியும் உள்ளது.
வலிப்பு நோயாளிகளுக்கான பிரத்யேக மருத்துவ முகாம் ஒன்றை, தர்மபுரியில், கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை, அக்., 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறது. தர்மபுரியில், கிருஷ்ணகிரி மெயின் ரோட்டிலுள்ள ஆவின் பால்பண்ணை எதிரிலுள்ள ரோட்டரி ஹாலில் காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கும். கட்டுப்படுத்த இயலாத வலிப்பு நோய் உள்ளவர்கள், வலிப்பு நோய் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் இம்முகாமில் பங்கேற்கலாம்.
கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் நிபுணர் டாக்டர் ராஜேஷ் சங்கர் ஐயர் மற்றும் அவரது குழுவினர் நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பொருத்தமான சிகிச்சை முறைகளை பரிந்துரைப்பர். முகாமில் பங்கேற்க முன்பதிவு அவசியம். தொடர்புக்கு: 73393 33485 எண்ணில் தொடர்பு கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.