/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டைட்டன் நிறுவன பங்களிப்புடன் அரசு பள்ளிக்கு புதிய கட்டடம்
/
டைட்டன் நிறுவன பங்களிப்புடன் அரசு பள்ளிக்கு புதிய கட்டடம்
டைட்டன் நிறுவன பங்களிப்புடன் அரசு பள்ளிக்கு புதிய கட்டடம்
டைட்டன் நிறுவன பங்களிப்புடன் அரசு பள்ளிக்கு புதிய கட்டடம்
ADDED : அக் 02, 2024 01:52 AM
டைட்டன் நிறுவன பங்களிப்புடன்
அரசு பள்ளிக்கு புதிய கட்டடம்
ஓசூர், அக். 2-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சின்ன பேலகொண்டப்பள்ளியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்குகிறது. 40 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஒரு வகுப்பறை மட்டுமே இருந்ததால், மாணவ, மாணவியர் சிரமப்பட்டனர்.
தலைமையாசிரியை கவுரம்மா மற்றும் பஞ்., தலைவி சாவித்திரியம்மா ஆகியோர், டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் (டீல்) நிறுவனத்திடம், புதிய வகுப்பறை கட்டடம் கட்டி தர கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட கலெக்டரிடம் உரிய அனுமதி பெற்று கடந்த மே, 17 ல் பூமி பூஜை நடந்தது. நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியிலிருந்து, 29 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
மாவட்ட கலெக்டர் சரயு, டீல் நிறுவன நிர்வாக இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் திறந்து வைத்தனர். சமூக பொறுப்புணர்வு திட்ட தலைவர் சண்முகம், மூத்த பொதுமேலாளர் ரவி சிவப்பா, டிவிஷனல் மேலாளர் ஹரிஹர சுப்பிரமணியம், குழு மேலாளர் பாஸ்கர், அசோசியேட் குரூப் மேலாளர் கேசவன், ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீனிவாசரெட்டி உட்பட ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, செயல் அதிகாரி பிரபு,
கட்டட பொறியாளர் சுரேஷ் செய்திருந்தனர்.

