/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குரங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி : ஏரியூர் பகுதி அலர்ட்; சுகாதாரத்துறை
/
குரங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி : ஏரியூர் பகுதி அலர்ட்; சுகாதாரத்துறை
குரங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி : ஏரியூர் பகுதி அலர்ட்; சுகாதாரத்துறை
குரங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி : ஏரியூர் பகுதி அலர்ட்; சுகாதாரத்துறை
ADDED : பிப் 14, 2024 10:44 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், குரங்கு காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை சார்பாக, குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தர்மபுரி துணை சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், குரங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, தர்மபுரி துணை சுகாதார அலுவலர் ஜெயந்தி தலைமையில், வட்டார மருத்துவர்கள் கொண்ட, குரங்கு காய்ச்சல் தடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா வன பகுதியை ஒட்டியுள்ள, ஏரியூர் வட்டார மருத்துவ அலுவலகத்தின் எல்லைக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள ஏரியூர், நாகதாசம்பட்டி, ஒகேனக்கல், கடமடை, செல்லமுடி உள்ளிட்ட பகுதிகள் அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதியை சேர்ந்தவர்கள், கர்நாடகாவில் இருந்து திரும்பும் நிலையில் உள்ளவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி இருந்தால் மருத்துவ குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தர்மபுரி மாவட்ட வனத்துறையினருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், வன விலங்குகள் குரங்கு காய்ச்சலால் இறந்தால், தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.
வனத்துறை எச்சரிக்கை
இது குறித்து, தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு கூறியதாவது:
கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, தமிழகத்தின் எல்லையோர மாவட்டமான, தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் குரங்குகளுக்கு தொற்று குறித்து, ஆய்வு செய்து வருகிறோம். தொற்றுக்குள்ளான குரங்குகளில் இருந்து மற்ற வன விலங்குகள், கால்நடைகளுக்கு, இந்த நோய் தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் கண்காணித்து வருகிறோம். தற்போது, ஒகேனக்கல், ஏரியூர் வனப்பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கும் பணி நடக்கிறது.
வனவிலங்குகள் இறந்தால், அவற்றை உடற்கூறாய்வு செய்து, குரங்கு காய்ச்சல் நோய் பாதிப்பு உள்ளதா, அதற்கான காரணங்கள் குறித்து, கண்டறிய முழு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் நோய் பாதிப்புக்குள்ளான மான், பன்றி உள்ளிட்டவற்றின், இறைச்சிகளை மனிதர்கள் உண்பதாலும், இந்த நோய் எளிதில் வேகமாக பரவக்கூடிய ஆபத்து
உள்ளது.
இவ்வாறு கூறினார்.

