/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'எதிர்கால சந்ததியினருக்காக வேலைவாய்ப்பு குடிநீர் பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன்'
/
'எதிர்கால சந்ததியினருக்காக வேலைவாய்ப்பு குடிநீர் பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன்'
'எதிர்கால சந்ததியினருக்காக வேலைவாய்ப்பு குடிநீர் பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன்'
'எதிர்கால சந்ததியினருக்காக வேலைவாய்ப்பு குடிநீர் பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன்'
ADDED : ஏப் 12, 2024 06:55 AM
பாப்பிரெட்டிப்பட்டி : 'எதிர்கால சந்ததியினருக்காக, குடிநீர், வேலைவாய்ப்பு பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன்,'' என, தர்மபுரி லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளர் சவுமியா பேசினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின், தர்மபுரி லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளர் சவுமியா கூட்டணி கட்சிகளான, பா.ஜ.,--- - அ.ம.மு.க.,--- - த.மா.கா., கட்சி நிர்வாகிகளுடன், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில், நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.இதில், வெங்கட்சமுத்திரம், மோளையானுார், போதக்காடு, பையர்நத்தம், கதிரிபுரம், வாசிக்கவுண்டனுார், பி.பள்ளிப்பட்டி, பி.துராஞ்சிப்பட்டி, நடூர், பொம்மிடி, கொப்பக்கரை, கொண்டகரஹள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு உள்ளிட்ட, 33 இடங்களில் பிரசாரம் செய்தார். போதக்காடு பகுதியில், வயலில் தோட்டம் கொத்திக் கொண்டிருந்த பெண்களுடன் சேர்ந்து தோட்டம் கொத்தி, களை பறித்து, கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளர்களிடம் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது மக்களிடையே, வேட்பாளர் சவுமியா பேசியதாவது: பாப்பிரெட்டிப்பட்டியில் தக்காளி தொழிற்சாலை கொண்டு வருவேன். விவசாயத்துக்கு முன்னுரிமை தரப்படும். வெற்றி பெற்றால் ஒவ்வொரு விவசாயிக்கும், அரசு டிராக்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயத்திற்கு பயன்படுகின்ற இடுபொருட்கள் மற்றும் பொருட்களை வழங்க போராடுவேன். அனைவரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். விவசாயத்திற்கு தான் முன்னுரிமை தரப்படும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போட்டது, பா.ம.க., மட்டும் தான். விவசாயமும், விவசாயிகளும் நன்றாக இருக்க, பா.ம.க., பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.ஒகேனக்கல்லில் இருந்து, 3 டி.எம்.சி., தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. அதை தர்மபுரி மாவட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். சுத்தமான குடிநீர் கொடுப்பது அரசின் கடமை. இதுவரை அது, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு கிடைக்கவே இல்லை. இதற்காக பல போராட்டங்களை, பா.ம.க., நடத்தி வருகிறது. அடிப்படை உரிமைகள் கிடைக்க, பா.ம.க.,வின் மாம்பழ சின்னத்திற்கு மக்கள் ஓட்டு போட வேண்டும்.ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற, லோக்சபாவில் பிரதமரிடம் பேசி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். படித்த இளைஞர்களுக்கு, இங்கு வேலை இல்லை. கிராமத்தில் வேலைவாய்ப்பு கிடைக்க பாடுபடுவேன். மாவட்டத்தில் நல்ல தொழிற்சாலைகள் அமைத்து, குடும்பத்தில் ஒருவருக்காவது நல்ல வேலை வழங்க, பா.ம.க., போராடும். போக்குவரத்து வசதிகள் இருந்தால்தான், அந்த ஊர் வளர்ச்சி அடையும். அதுபோன்று நல்ல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர பாடுபடுவேன். பெண்களுடைய கஷ்டம், கிராமத்திலுள்ள கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும். அதை, உங்களுக்காக உங்களில் ஒருவராக, உங்கள் வீட்டு பெண்ணாக, லோக்சபாவில் பேச வாய்ப்பு வழங்க வேண்டும்.பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களுடைய அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பேன். பொம்மிடி அருகே, ஆனைமடுவு அணைக்கட்டு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்கால சந்ததியினருக்காக, குடிநீர், வேலைவாய்ப்பு பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன். நீண்டகால நிலுவையிலுள்ள பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற லோக்சபாவில் குரல் கொடுப்பேன். தொடர்ந்து இம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்வேன்.இவ்வாறு, அவர் பேசினார்.பல்வேறு கிராமங்களில் ஓட்டு சேகரித்த வேட்பாளர் சவுமியாவிற்கு, பெண்கள் திரளாக நின்று சிறப்பான வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில், பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., வேலுசாமி, தர்மபுரி, பா.ம.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

