/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பணியில் டாக்டர்கள் இல்லாததால் அரசு மருத்துவமனை முற்றுகை
/
பணியில் டாக்டர்கள் இல்லாததால் அரசு மருத்துவமனை முற்றுகை
பணியில் டாக்டர்கள் இல்லாததால் அரசு மருத்துவமனை முற்றுகை
பணியில் டாக்டர்கள் இல்லாததால் அரசு மருத்துவமனை முற்றுகை
ADDED : ஏப் 29, 2024 07:36 AM
பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி - -சேலம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது பொ.மல்லாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இங்கு, பில்ப ருத்தி, பொம்மிடி சிக்கம்பட்டி, பண்டாரசெட்டிப்பட்டி உள்ளி ட்ட, 50க்கும் மேற்பட்ட கிராம ங்களில் இருந்து தினமும், 100 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். நேற்று காலை பொம்மிடியை சேர்ந்த மாதேஷ் என்பவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், சிகிச் சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு ஒரு செவிலியர் மட்டுமே இருந்துள்ளார். டாக்டர்கள் யாரும் இல்லாததால், சிகிச்சை பெற வந்த நோயாளிகள் அவதிப்பட்டனர். இதை கண்டித்து, டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்டோர் மருத்துவம னையை முற்றுகையிட்டனர்.
சம்பவ இடம் வந்த பொம்மிடி எஸ்.ஐ., விக்னேஷ் உள்ளிட்ட போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். பாப்பி ரெட்டிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுரிசங்கர் சமரசத்தில் ஈடுபட் டார். அப்போது அவர், ஒரு டாக்டர் பயிற்சிக்கு சென்று விட்டதாகவும், ஒருவருக்கு வார விடுமுறை எனவும் தெரிவித்தார். 24 மணி நேரம் செயல்பட அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும், அதுவரை மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவி த்ததால், பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.

