/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தூய்மை பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்
/
தூய்மை பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்
ADDED : மார் 09, 2024 01:32 AM
தர்மபுரி, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் சார்பில், துாய்மை பணியாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பணியாளர்களுக்கு, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தின் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். பின், துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களின் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கு, 1,000 ரூபாய், பிளஸ் 1 படிக்கும், 3 மாணவர்களுக்கு தலா, 1,000 வீதம், 3,000 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், பிளஸ் 2 படிக்கும், 4 மாணவர்களுக்கு தலா, 1,500 வீதம், 6,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
மேலும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, இளங்கலை பட்டம் மற்றும் இளங்கலை கல்வி படிப்பு படிக்கும், 8 மாணவர்களுக்கு, 14,250 ரூபாய் என மொத்தம், 24,250 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
இயற்கை மரண உதவித் தொகையாக இரண்டு துாய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா, 25,000 வீதம், 50,000 ரூபாய் வழங்கப்பட்டது.
மொத்தம், 18 பயனாளிகளுக்கு, 74,250 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது.

