/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஏரியில் கொட்டப்படும் கழிவு: பொதுமக்கள் கடும் அவஸ்தை
/
ஏரியில் கொட்டப்படும் கழிவு: பொதுமக்கள் கடும் அவஸ்தை
ஏரியில் கொட்டப்படும் கழிவு: பொதுமக்கள் கடும் அவஸ்தை
ஏரியில் கொட்டப்படும் கழிவு: பொதுமக்கள் கடும் அவஸ்தை
ADDED : ஜன 02, 2024 10:45 AM
தர்மபுரி: தர்மபுரி அருகே, ஏரிக்கரையில் கொட்டப்படும் கோழிக்கழிவால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தர்மபுரி, சோகத்துார் பஞ்.,க்கு உட்பட்ட ஏரி, 1,000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
இதில், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்தும், தடுப்பணைகளிலிருந்தும் வெளிவரும் தண்ணீர் இந்த ஏரியில் தேங்குகிறது. இதில், சோகத்துார் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் பராமரித்து வருகின்றனர்.
கடந்தாண்டு பெய்த தொடர் மழையால் இந்த ஏரியில் தற்போது வரை தண்ணீர் தேங்கியுள்ளது. இதில், பஞ்., நிர்வாகம் சார்பில் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ள நிலையில், அவை வளர்ந்து தற்போது மீன் பிடி ஏலம் நடந்து
வருகிறது.
இந்நிலையில், இந்த ஏரியை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தை சேர்ந்த சிலர், கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கழிவு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கூல்டிரிங்ஸ் கப்புகளை இந்த ஏரியில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
இதனால், ஏரியின் துாய்மை மாசடைவதுடன் குப்பை கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, ஏரியின் துாய்மையை பாதுக்காக்க, இங்கு குப்பை கழிவுகளை கொட்டுவோர் மீது, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

