/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்
/
துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்
ADDED : டிச 21, 2025 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் நகராட்சியில், 18 வார்-டுகள் உள்ளன. இவற்றில், 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் தெருக்களை சுத்தம் செய்தல், குப்பையை அகற்றுதல், கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்துதல் மற்றும் பொது இடங்களை சுகாதாரமாக பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்-றனர்.
இந்நிலையில் முதற்கட்டமாக, அரூர் நக-ராட்சியில் பணிபுரியும், 30 துாய்மை பணியாளர்க-ளுக்கு காலை உணவு வழங்கும் சோதனை திட்-டத்தை நகராட்சி கமிஷனர் ஹேமலதா நேற்று துவக்கி வைத்தார். இதில், நகராட்சி தலைவர் இந்-திராணி, வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அலுவ-லர்கள் கலந்து கொண்டனர்.

