/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 81,515 வாக்காளர்கள் நீக்கம்
/
தர்மபுரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 81,515 வாக்காளர்கள் நீக்கம்
தர்மபுரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 81,515 வாக்காளர்கள் நீக்கம்
தர்மபுரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 81,515 வாக்காளர்கள் நீக்கம்
ADDED : டிச 20, 2025 07:11 AM

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், 5 சட்டசபை தொகுதிகளுக்கான, வரைவு வாக்காளர் பட்டியலை, அரசியல் கட்சியினர் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று வெளியிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, வாக்காளர் பட்-டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம், 12,03,917 வாக்கா-ளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டசபை தொகுதியில், 1,16,722 ஆண்கள், 1,14,057 பெண்கள், 18 மூன்றாம் பாலினத்த-வர்கள் என மொத்தம், 2,30,797 வாக்காளர்கள் உள்ளனர். பென்-னாகரத்தில், 1,23,658 ஆண்கள், 1,15,827 பெண்கள், 7 மூன்றாம் பாலினத்தவர் என, 2,39,492 வாக்காளர்கள், தர்மபு-ரியில், 1,25,364 ஆண்கள், 1,23,361 பெண்கள், 77 மூன்றாம் பாலினத்தவர் என, 2,48,802 வாக்காளர்கள், பாப்பிரெட்டிப்பட்-டியில், 1,24,314 ஆண்கள், 1,23,249 பெண்கள், 14 மூன்றாம் பாலினத்தவர்கள் என, 2,47,577 வாக்காளர்கள், அரூரில் (தனி) 1,18,570 ஆண்கள், 1,18,659 பெண்கள், 20 மூன்றாம் பாலினத்-தவர் என, 2,37,249 வாக்காளர்கள் உள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், 5 சட்டசபை தொகுதிகளில் உள்ள, 1,596 ஓட்டுச்சாவடிகளில், 6,08,628 ஆண்கள், 5,95,153 பெண்கள், 136 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம், 12,03,917 வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதி வாரியாக இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபட்டுள்ளன. இதில், பாலக்கோடு சட்டசபை தொகுதியில், 14,779, பென்னா-கரம், 14,298, தர்மபுரி, 21,903, பாப்பிரெட்டிபட்டி, 15,515, அரூர், 15,020 என மொத்தம், 81,515 வாக்காளர்கள் நீக்கபட்டுள்-ளனர்.தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 5 சட்டசபை தொகுதிகளில் மொத்தம், 6.34 சதவீதம் நபர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்-டுள்ளனர். மேலும் நேற்று முதல், 2026 ஜன., 18 வரையிலான காலத்தில் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் வாக்காளர் பதிவு அலுவலர்களால் பெறப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டி.ஆர்.ஓ., கவிதா, ஆர்.டி.ஓ.,க்கள் காயத்ரி, செம்மலை, தேர்தல் தாசில்தார் அன்பு உட்பட தொடர்புடைய தேர்தல் அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

