/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் தொடர் கோடை மழை; குறைய தொடங்கிய வெப்ப அளவு
/
தர்மபுரியில் தொடர் கோடை மழை; குறைய தொடங்கிய வெப்ப அளவு
தர்மபுரியில் தொடர் கோடை மழை; குறைய தொடங்கிய வெப்ப அளவு
தர்மபுரியில் தொடர் கோடை மழை; குறைய தொடங்கிய வெப்ப அளவு
ADDED : மே 23, 2024 07:17 AM
தர்மபுரி : கோடை காலம் தொடங்கிய நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த மார்ச், 25 முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. தினமும், 37.7 டிகிரி செல்ஷியஸ் அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகி, மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து, வரலாறு காணாத வெப்பத்தினால் அனல் காற்று வீச தொடங்கியது. இதில், 48 ஆண்டுகளுக்கு பிறகு, 108.7 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல், காலை, 11:30 முதல் மாலை, 3:00 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
கடும் வெப்பத்தால் கூலித்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், நீர்நிலைகள், கிணறு, ஆழ்துளை கிணறுகள் வறண்டு பயிர்கள் கருகின. இதனால், கோடை மழை கை கொடுக்குமா என்று எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்தது. இதனால், விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது. அனல் காற்று வீசுவது குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதன்படி, 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வந்த நிலையில், தொடர் கோடை மழையால், மாவட்டத்தின் வெப்பநிலை குறைந்து நேற்று முன்தினம், 88.8 பாரன்ஹீட் என வெயில் பதிவாகியது. இதனால், தர்மபுரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

