ADDED : அக் 10, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடிதாக்கி
பசுமாடு உயிரிழப்பு
பாப்பிரெட்டிப்பட்டி, அக். 10---
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம்,
சித்தேரி ஊராட்சி, தேக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன், விவசாயி. இவர், தோட்டத்தில் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மேய்ச்சலையடுத்து, தோட்டத்தில் கட்டியிருந்தார். அன்று இரவு சித்தேரி மலைப் பகுதியில், பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. காலையில் ரங்கநாதன் பார்த்தபோது தோட்டத்தில் கட்டியிருந்த பசுமாடு இடிதாக்கி இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதே போன்று, ஏ.பள்ளிப்பட்டி அடுத்த கல்லாதது காடு பகுதியில் பெய்த மழையின் காரணமாக அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவரின் வீட்டின், ஒரு பக்கம் சுவர் நேற்று காலை இடிந்து விழுந்தது. இவை குறித்து வருவாய் துறை
அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

