/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வீட்டில் அனுமதியின்றி சின்னம் வரைந்த 3 பேர் மீது வழக்கு
/
வீட்டில் அனுமதியின்றி சின்னம் வரைந்த 3 பேர் மீது வழக்கு
வீட்டில் அனுமதியின்றி சின்னம் வரைந்த 3 பேர் மீது வழக்கு
வீட்டில் அனுமதியின்றி சின்னம் வரைந்த 3 பேர் மீது வழக்கு
ADDED : மார் 28, 2024 06:56 AM
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடாசமுத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் கண்காணிப்பு பணியில் நேற்று ஈடுபட்டார்.
அப்போது, மோளையானுார் அம்பேத்கர் காலனி பகுதியில், பிரசாத், 37, வெங்கட் சமுத்திரம் பகுதியில் ஜெயராமன், 67, கொப்பக்கரை பகுதியை சேர்ந்த மாரிமுத்து, 60, ஆகியோர், கட்சி சின்னங்களை, அவர்களது வீட்டின் சுவர்களில் வரைந்திருந்தனர். இவர்கள் மூவரும், உதவி தேர்தல் அலுவலர் அனுமதியின்றி தேர்தல் விதிமுறை மீறி, தங்கள் வீட்டின் சுவர்களில், கட்சி சின்னங்களை வரைந்திருந்தது, தேர்தல் விதி மீறல். இதையடுத்து, அனுமதியின்றி கட்சி சின்னங்கள் வரைந்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.