/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓட்டு எண்ணும் மையம் அருகே 'ட்ரோன்' பறக்க தடை
/
ஓட்டு எண்ணும் மையம் அருகே 'ட்ரோன்' பறக்க தடை
ADDED : ஏப் 29, 2024 07:35 AM
தர்மபுரி : தர்மபுரியில், ஓட்டு எண்ணும் மையம் அருகே, 2 கி.மீ., தொலைவுக்கு, 'ட்ரோன்'கள் பறக்க தடை விதித்து, மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முழுவதும் லோக்சபா தேர்தல் இம்மாதம், 19ல் நடந்து முடிந்தது. அதேபோல், தர்மபுரி மாவட்டத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செட்டிகரையிலுள்ள அரசு பொறியியல் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளன. இதில், சுழற்சி முறையில், 222 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில், அங்கீகரிப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலையில், மின்னனு ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. இந்நிலையில், நான்கடுக்கு பாதுகாப்புக்கு, மத்தியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், தர்மபுரி லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள, செட்டிகரை அரசு பொறியியல் கல்லுாரியை சுற்றியுள்ள, 2 கி.மீ., தொலைவு வரை, 'ட்ரோன்'கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

