/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நம்பிக்கையில்லா தீர்மானம் திரும்ப பெற்ற அ.தி.மு.க., கவுன்சிலர்கள்
/
நம்பிக்கையில்லா தீர்மானம் திரும்ப பெற்ற அ.தி.மு.க., கவுன்சிலர்கள்
நம்பிக்கையில்லா தீர்மானம் திரும்ப பெற்ற அ.தி.மு.க., கவுன்சிலர்கள்
நம்பிக்கையில்லா தீர்மானம் திரும்ப பெற்ற அ.தி.மு.க., கவுன்சிலர்கள்
ADDED : அக் 02, 2024 01:53 AM
நம்பிக்கையில்லா தீர்மானம் திரும்ப
பெற்ற அ.தி.மு.க., கவுன்சிலர்கள்
ஓசூர், அக். 2-
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் டவுன் பஞ்., கவுன்சிலர்கள் கூட்டம் கடந்த, 26ல் நடந்தது. இதில் கவுன்சிலர் சிலர், தலைவர் தேவராஜ் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் எனக்கூறி, செயல் அலுவலர் மஞ்சுநாத்திடம் மனு வழங்கினர்.
இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக இருந்த, அ.தி.மு.க., கவுன்சிலர்களான, 11வது வார்டு சண்முகம் மற்றும் 12 வார்டு சீனிவாசன் ஆகிய இருவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்ப பெறுவதாக கூறி, செயல் அலுவலர் மஞ்சுநாத்திடம் நேற்று மனு
வழங்கினர்.
டவுன் பஞ்., தலைவர் தேவராஜ், அ.தி.மு.க., கெலமங்கலம் நகர செயலாளர் மஞ்சுநாத், முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் நகர செயலாளர் திம்மராயப்பா உட்பட பலர் உடனிருந்தனர்.