/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி லோக்சபா தொகுதியில் 44 பேர் வேட்பு மனு தாக்கல்
/
தர்மபுரி லோக்சபா தொகுதியில் 44 பேர் வேட்பு மனு தாக்கல்
தர்மபுரி லோக்சபா தொகுதியில் 44 பேர் வேட்பு மனு தாக்கல்
தர்மபுரி லோக்சபா தொகுதியில் 44 பேர் வேட்பு மனு தாக்கல்
ADDED : மார் 28, 2024 06:56 AM
தர்மபுரி : தர்மபுரி லோக்சபா தொகுதியில் போட்டியிட, 44 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்., 19 ல், ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த, ஏப்., 16 ல் வெளியிடப்பட்டது. கடந்த, 20 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.
தர்மபுரி லோக்சபா தொகுதியில் போட்டியிட, தி.மு.க.,வில் வேட்பாளர் மணி, அ.தி.மு.க.,வில் அசோகன், பா.ம.க.,வில் சவுமியா, நா.த.க., வேட்பாளர் அபிநயா மற்றும் பிற கட்சியினர், சுயேச்சைகள் என மொத்தம், 44 வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதில், தி.மு.க., வேட்பாளர் மணி பெயரில், மணி என்ற பெயர் கொண்ட, இரு சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். பா.ம.க., வேட்பாளர் சவுமியா பெயரில், அதே பெயர் கொண்ட ஒரு சுயேச்சை வேட்பாளர், அ.தி.மு.க., வேட்பாளர் அசோகன் பெயரில், அதே பெயர் கொண்ட ஒரு சுயேச்சை வேட்பாளர் மனு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

