தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கோவில் குளம் ஆக்கிரமிப்புகள் அகற்ற கோரிக்கை

கோவில் குளம் ஆக்கிரமிப்புகள் அகற்ற கோரிக்கை

கோவில் குளம் ஆக்கிரமிப்புகள் அகற்ற கோரிக்கை


ADDED : ஏப் 20, 2024 09:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2024 09:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், கோவில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: தீர்த்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், புனித நீராட, மலையின் கீழ்பகுதியில், 21 குளங்கள் இருந்தன. இதில், குளித்த பின், மலைக்கோவிலுக்கு சென்று அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடுவது மரபாக இருந்தது. இந்நிலையில், தீர்த்தமலையில் பெரிய குளம் மட்டுமே இன்றளவும் உள்ளது.

ஒரு குளம் அழிக்கப்பட்டு, பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குளங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, வருவாய்த்துறை சார்பில், அனைத்து குளங்களையும் சர்வே செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us