/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கொசுக்கடியை தாங்க முடியாமல் புறப்பட்ட அமைச்சர் கயல்விழி
/
கொசுக்கடியை தாங்க முடியாமல் புறப்பட்ட அமைச்சர் கயல்விழி
கொசுக்கடியை தாங்க முடியாமல் புறப்பட்ட அமைச்சர் கயல்விழி
கொசுக்கடியை தாங்க முடியாமல் புறப்பட்ட அமைச்சர் கயல்விழி
ADDED : செப் 03, 2024 05:18 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இயங்கும், காரிமங்கலம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி மற்றும் ஒட்டப்பட்டியிலுள்ள மாணவர் விடுதியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி நேற்று ஆய்வு செய்தார்.
இதில், ஒட்டப்பட்டியிலுள்ள மாணவர் விடுதி கட்டடத்தின் பின் பகுதியில், ஆய்வு செய்தபோது, அப்பகுதி முழுவதும், கொசு தொல்லை அதிகமாக இருந்தது. அதனால், அமைச்சர் கயல்விழி, கலெக்டர் சாந்தி உட்பட அனைவரும் கொசுக்கடியை தாங்க முடியாமல் அங்கிருந்து கிளம்பினர். இதை கவனித்த தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, நல்லம்பள்ளி பி.டி.ஓ., லோகநாதனை அழைத்து, உடனடியாக பஞ்., நிர்வாகம் மூலம், கொசு மருந்து அடிக்க சொல்லுங்கள். இல்லையெனில், இங்குள்ள அதிகப்படி-யான கொசுக்களால் டெங்கு, மலேரிய உள்ளிட்ட அனைத்து நோய்களும், எளிதில் பரவும் என அறிவுறுத்தினார்.