/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'தமிழகத்தில் அ.தி.மு.க., - தி.மு.க.,வை மாறி மாறி முதல்வர் பதவியில் அமர வைத்தது பா.ம.க.,தான்'
/
'தமிழகத்தில் அ.தி.மு.க., - தி.மு.க.,வை மாறி மாறி முதல்வர் பதவியில் அமர வைத்தது பா.ம.க.,தான்'
'தமிழகத்தில் அ.தி.மு.க., - தி.மு.க.,வை மாறி மாறி முதல்வர் பதவியில் அமர வைத்தது பா.ம.க.,தான்'
'தமிழகத்தில் அ.தி.மு.க., - தி.மு.க.,வை மாறி மாறி முதல்வர் பதவியில் அமர வைத்தது பா.ம.க.,தான்'
ADDED : ஏப் 04, 2024 04:39 AM
தர்மபுரி: ''தமிழகத்தில், அ.தி.மு.க., - தி.மு.க.,வை மாறி மாறி முதல்வர்
பதவியில் அமர வைத்தது பா.ம.க., தான்,'' என, பா.ம.க., தலைவர்
அன்புமணி பேசினார்.
தர்மபுரி வள்ளலார் திடலில் நேற்று, தர்மபுரி லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளர் சவுமியாவை ஆதரித்து நடந்த, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது:
தர்மபுரி லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளர் சவுமியா, தர்மபுரி மாவட்ட மக்களுக்காக, தொடர்ந்து போராடக் கூடியவர். மாவட்டம் முழுவதும் நீர்ப்பாசன திட்டங்களை அவர் நிச்சயம் செய்வார். தர்மபுரியில், புளி, மாம்பழம், தக்காளி, மரவள்ளி கிழங்கு உள்ளிட்டவை அதிகம் விளைகின்றது. அவற்றை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய, சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலம் கொண்டு வருவார். முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர், தர்மபுரி தேர்தல் பிரசாரத்தில், பா.ம.க.,வை பற்றி பேசுகின்றனர். நீங்கள் செய்த சாதனைகளை பற்றி பேசுங்கள். பா.ம.க.,விற்கு சமூகநீதி தான் உயிர் மூச்சு, நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும், எந்த சமரசமும் செய்தது கிடையாது. தி.மு.க.,வினர் ஆட்சி
அதிகாரத்தை வைத்து கொள்ளை
அடிக்கின்றனர்.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வை, பா.ம.க., தான் மாறி மாறி முதல்வர் ஆக்கியது. உங்களை முதல்வர்
ஆக்கியது தான், நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஒரு வியாபாரி. சமூக நீதி பற்றி எல்லாம் அவருக்கு தெரியாது. அதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் இருக்கும் அமைச்சர்களும் வியாபாரிகள் தான். இட ஒதுக்கீடு குறித்தும், பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்தும், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் பேசி வருகின்றனர். இதில், பிரதமரோ அல்லது, பா.ஜ., கட்சியோ ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மாட்டோம் என கூறினார்களா? அதேபோல், காங்., கட்சி எங்காவது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என அறிவித்தார்களா?
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ''ஜெயலலிதா இருந்தபோது, தர்மபுரி மாவட்டத்தில், தொட்டில் குழந்தை திட்டம் மூலம், பெண் குழந்தைகளை காப்பாற்றினார். வேட்பாளர் சவுமியா அதை முழுமையாக செய்வார். கல்வி அறிவில், தர்மபுரி மாவட்டம் முன்னேறி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க., அறிவித்துள்ள, 10 வேட்பாளர்களில், 3 பேர் பெண்கள். பிரதமர் அறிவித்தது போல், 400 தொகுதிகள் மட்டுமல்ல தர்மபுரியோடு சேர்த்து, 401 தொகுதிகள் வென்று காட்டுவோம்,'' என்றார்.

