ADDED : ஏப் 13, 2024 07:45 AM
தர்மபுரி : அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் சாந்தி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில், 'சக மனிதர்களை ஜாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காண மாட்டேன். சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன். அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து தந்த அம்பேத்கர் பிறந்த நாளில் ஜாதி வேறுபாடுகள் ஏதுமில்லா சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம்' என, கோஷமிட்டு உறுதிமொழி ஏற்றனர்.
டி.ஆர்.ஒ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அருண்மொழிதேவன், கலெக்டரின் பொது மேலாளர் ராஜசேகர் உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில், எஸ்.பி., ஸ்டீபன்ஜேசுபாதம் தலைமையில், சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன், டி.எஸ்.பி., நாகலிங்கம், நிர்வாக அலுவலர் பாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.* கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், அம்பேத்கர் பிறந்த நாளை (14ம் தேதி) முன்னிட்டு, 'சமத்துவ நாள்' உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் சரயு தலைமையில், அனைத்து அரசு துறை அலுவலர்களும் நேற்று எடுத்துக் கொண்டனர்.

