/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'தி.மு.க.,-வை அவ்வளவு எளிதில் துடைத்தெறிந்து விட முடியாது'
/
'தி.மு.க.,-வை அவ்வளவு எளிதில் துடைத்தெறிந்து விட முடியாது'
'தி.மு.க.,-வை அவ்வளவு எளிதில் துடைத்தெறிந்து விட முடியாது'
'தி.மு.க.,-வை அவ்வளவு எளிதில் துடைத்தெறிந்து விட முடியாது'
ADDED : ஏப் 05, 2024 04:51 AM
இண்டூர்: ''தி.மு.க.,-வை அவ்வளவு எளிதில் துடைத்தெறிந்து விட முடியாது,'' என, அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
தர்மபுரி மாவட்டம், இண்டூரில் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்தில், தர்மபுரி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மணியை ஆதரித்து, அவர் பேசியதாவது: தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசும்
பிரதமர் மோடி, தி.மு.க.,-வையும், காங்., கட்சியையும்
துடைத்தெறிய வேண்டும் என்கிறார். இக்கட்சிகள் தியாகங்களால் வளர்ந்தது. இந்திய இறையாண்மையை பாதுகாப்பதில், தி.மு.க., என்றைக்கும் சமரசம் செய்து கொண்டதில்லை. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தொடங்கி இக்கட்சி தலைவர்கள் எல்லோருமே, மக்கள் நலனுக்காக பாடுபட்டவர்கள். தி.மு.க., தலைவர்கள், மக்கள் நலன் காக்கும் போராட்டத்திலே சிறையில் இருந்தவர்கள். ஆகவே, தி.மு.க.,-வை அவ்வளவு எளிதில் துடைத்தெறிந்து விட முடியாது.
எந்த வரலாறும் இல்லாதது தான், பா.ஜ., கட்சி. மக்கள் நலன் காக்கும் போராட்டத்திலே
பிரதமர் மோடியோ அல்லது அக்கட்சியின் தலைவர்களோ சிறைக்கு சென்ற வரலாறு கிடையாது. ஆகவே, தி.மு.க., - காங்., ஆகிய இரு கட்சிகளை அவ்வளவு எளிதில் மக்களிடம் இருந்து பிரித்து விட முடியாது.
தமிழகத்தில், 'இண்டியா' கூட்டணி கட்சிகள் ஓரணியாகவும், ஓரணியாக இருந்த கட்சிகள் வெவ்வேறு கூட்டணியிலும் போட்டியிடுகின்றன. அதில் ஒரு கட்சி, எதற்காக கூட்டணி மாற்றி அமைக்கிறது என்பதே மக்களுக்கு புரியவில்லை. அக்கட்சியும் தர்மபுரியில் வேட்பாளரை களமிறக்கி உள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.

